48
ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி ஆஷிஃபா காவல்துறையினர் உட்பட எட்டு பேரால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் , RSS சங்கபரிவாரின் தொடர் அத்துமீறலுக்கு எதிராகவும் நாம் மனிதர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அதிரையில் நடைபெற உள்ளது. நாளை (20/04/2018) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என நாம் மனிதர் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.