Home » எச்.ராஜா மற்றும் SV.சேகருக்கு அதிரை எக்ஸ்பிரஸ் கடும் கண்டனம்!!

எச்.ராஜா மற்றும் SV.சேகருக்கு அதிரை எக்ஸ்பிரஸ் கடும் கண்டனம்!!

by admin
0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்:- ஊடகத்துறையில் பல்வேறு நெருக்கடிக்கும்,அவமரியாதைக்கும் உள்ளாகி சமூக அக்கறையுடன் பல ஊடகவியலாளர்கள் பயணித்து வருகின்றனர், அதிலும் குறிப்பாக பெண்கள் இத்துறையில் தங்களுடைய அளாதிய ஆற்றலை கால்பதித்து வருகின்றனர்.விழாக்களில் கூட குடும்பத்தினருடன் பங்கேற்க முடியாமல் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு மக்களுடன் கொண்டாடி மகிழ்ந்த நிகழ்வுகளெல்லாம் நிறைய இருக்கிறது. அதே சமயத்தில் இயற்கை பேரிடர்களில் களத்திலும் களம்கோர்த்து பங்காற்றிய காட்சியெல்லாம் இன்றும் நினைவுடன் வந்து செல்கிறது.

அப்படியிருக்கையில் தமிழகத்தில் ஊடகவியலாளர்களையும்,ஊடகங்களையும் தரக்குறைவாகவும்,கீழ்த்தரமான வகையில் தொடர்ந்து பேசிவரும் பாஜகவினர் குறிப்பாக எச்.ராஜா மற்றும் S.V சேகர் தடித்த வார்த்தைகளால் கொச்சைப்படுத்தி வருகின்றனர்.இன்று தன்னுடைய முகநூல் பக்கத்தில் மிகவும் கீழ்த்தரமான விமர்சனத்தை பெண் ஊடகவியலாளர்களின் மீது வெளியிட்டுள்ளார்.ஊடகவியலாளரை கொச்சைப்படுத்தும் S.V சேகர் மற்றும் எச்.ராஜா ஆகியோரை அதிரை எக்‌ஸ்பிரஸ் மிகவும் கண்டிக்கிறது.

உடனே அரசு விழிப்புடன் செயல்பட்டு உடனே இதுபோன்ற பிரிவினைவாதிகளை கைது செய்யவேண்டும் என்றும் அதிரை எக்ஸ்பிரஸ் கோரிக்கை வைக்கிறது.

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter