Home » சிறுமி ஆசிஃபாவிற்கு நீதி கோரி நாம் மனிதர் கட்சி சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் !அதிரை எக்ஸ்பிரஸ் அளித்த பிரத்தியோக பேட்டி!!

சிறுமி ஆசிஃபாவிற்கு நீதி கோரி நாம் மனிதர் கட்சி சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் !அதிரை எக்ஸ்பிரஸ் அளித்த பிரத்தியோக பேட்டி!!

0 comment

 

காஷ்மீரில் ஆஷிஃபா என்ற 8 வயது சிறுமியை கோவில் கருவறைக்குள் அடைத்து வைத்து கற்பழித்து, கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இக்கொடூர குற்றத்திற்கு நீதி வேண்டியும், நாம் மனிதர் கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு, அக்கட்சியின் தஞ்சை மாவட்டத் தலைவர் எம்.ஏ சரபுதீன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக மக்கள் விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தங்க. குமரவேல், நாம் மனிதர் கட்சி திருவாரூர் மாவட்டச் செயலாளர் பி.எம் முகமது சுலைமான், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் த. உதய சூரியன், திருவாரூர் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் ஆதவன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் சிறுமி ஆஷிபா படுகொலைக்கு நீதி கேட்டும், குற்றவாளிகளை தண்டிக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter