Home » ஜார்கண்ட் மாநிலம், கிரிடி மாநகராட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பாராட்டு விழா!!

ஜார்கண்ட் மாநிலம், கிரிடி மாநகராட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பாராட்டு விழா!!

0 comment

 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராக பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் , தேசிய பொதுச் செயலாளராக பி.கே.குஞ்ஞாலி குட்டி எம்.பி., பொறுப்பேற்றதிலிருந்து வட மாநிலங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலுப்பெற அடிப்படை கட்டமைப்பு பணிகளை முடிக்கிவிட்டுள்ளனர்.

குறிப்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் கட்சியின் தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி.முஹம்மது பஷீர் எம்.பி., தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வளர்ச்சிப்பணிகளுக்கான அடிப்படை பணிகள் துவங்கப்பட்டு துணை அமைப்பான முஸ்லிம் யூத் லீக் , முஸ்லிம் மாணவர் பேரவை , வனிதா லீக் , சுதந்திர தொழிலாளர் யூனியன் நிர்வாகிகள் முழு களப்பணியில் ஈடுப்பட்டு மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் பணிகளில் ஈடுப்பட்டு வந்தனர்.

ஜார்க்கண்டில் 6 மாதத்தில் கட்சி கட்டமைப்பு , சேவை பணிகள் மூலம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பி.ஜே.பி. காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு எதிராக களம் கண்டு எதிர்ப்புகளை , அச்சுறுத்தல்களை மீறி  கிரிடி மாநகராட்சியில் 6 வார்டுகளையும் , மதுப்பூர் நகராட்சியில் 2 வார்டுகளையும் , மிக முக்கியமாக ராம்கார் நகராட்சியில் 1 வார்டில் ( இந்தர் தேவ் ராம்) என்ற ஒருவர் ஆக 9 இடங்களில் முஸ்லிம் லீக் சார்பில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

இனி வரும் சட்டமன்ற , நாடாளுமன்ற தேர்தல்களில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போட்டியிட்டு குறிப்பிடதக்க

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter