தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சுற்றுசூழலை பாதுகாக்கும் விதத்திலும், பிளாஸ்டிக் பைகள் மற்றும் மக்காத குப்பைகளை ஒழிக்கும் விதத்தில் ஒரு சில தினங்களுக்கு முன்பு அதிரை சுற்றுசூழல் மன்றம் 90.4கின் சார்பில் ஆண்களுக்கான தூய்மையான அதிரையை உருவாக்குவோம் கருத்தரங்க நிகழ்ச்சி கதீஜா மஹாலில் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக சுற்றுசூழலை பாதுகாக்க பெண்களின் பங்கு தற்பொழுது கண்டிப்பான முறையில் தேவை என்பதால் பெண்களுக்கான தூய்மையான அதிரையை உருவாக்குவோம் கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சி அதிரை இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலை பள்ளி வளாகத்தில் வருகிற (13.05.2018) ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 04.30 மணியளவில் நடைபெறஉள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சென்னையை சேர்ந்த பெண் கருத்தாளர்கள் வருகை தந்து பயிற்சி அளிக்க உள்ளார்கள்.
நம் அதிரை பகுதியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் அனைத்து பெண்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவியர்களை கருத்தரங்கில் பங்குபெற்று பயனடைய கேட்டுக்கொண்டனர்.
இந்த கருத்தரங்கில் பவர் பாயிண்ட் மூலம் நடத்தப்படும் பாடங்கள்:-
1. குப்பைகளின் வகைகள் ,குப்பைகளை செல்வமாக்குதல்.
2. குப்பைகள் சேர்வதால் வரும் தீமைகள் மற்றும் நோய்கள்.
3. குப்பைகளை எரிப்பதால் வரும் தீமைகள் மற்றும் நோய்கள்.
4. குப்பைகளை தரம் பிரித்தல்.
5.குப்பைகளைக்கொண்டு வீட்டிலேயே உரம் தயாரித்தல்.
6. சானிட்டரி நாப்கின் பயன்பாடு மற்றும் அப்புறப்படுத்துதல்.
7. பிளாஸ்டிக், தெர்மோகோல் தவிர்த்தல்.
8. பண்டிகை மற்றும் திருமணம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் பைகள், கப்புகள் மற்றும் தெர்மோகோல் போன்ற தீமைகள் தரும் பொருட்களை தவிர்த்தல் போன்ற தலைப்புகளில் பவர்பாயிண்ட் மூலம் கலந்துரையாடல் வாயிலாக கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.