163
தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வல அமைப்பினர் பொதுமக்கள் தாகத்தை தணிக்கும் விதத்தில் இலவச நீர் மற்றும் மோர் பந்தங்களை அமைத்து வினியோகிக்கின்றனர்.
அதேபோல்,தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டை தாலுகா அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்(அதிமுக) சார்பில் இலவச நீர் மோர் பந்தல் திறந்தனர்.
இந்த நிகழ்ச்சியை துவங்கி வைக்க பட்டுகோட்டை சட்டமன்ற உறுப்பினர் C.V.சேகர் அவர்கள் வருகைதந்தார்.
இந்நிகழ்வில், அதிரை அதிமுக நிர்வாகிகளான பிச்சை, தமீம், அபூதாஹிர் போன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த மோர் பந்தலில் பொதுமக்கள் மோர் அருந்தி தாகத்தை தனித்து கொண்டனர்.