61
தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ள, முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரி, இன்று சென்னை வருகிறார். நாளை, அவரது பேரனுக்கு நடக்கும், முதல் பிறந்த நாள் விழாவில் பங்கேற்கிறார். சென்னையில், ஓரிரு நாட்கள் தங்கும் அவர், தி.மு.க., தலைவர், கருணாநிதியை சந்திப்பார் என, தெரிகிறது. அழகிரியின் மகன், துரை தயாநிதி; இவரது மகனும், அழகிரியின் பேரனுமான ருத்ரனுக்கு, நாளை முதலாவது பிறந்த நாள் விழா, சென்னையில் கொண்டாடப்படுகிறது. இதில், பங்கேற்பதற்காக, அவர் இன்று மதுரையில் இருந்து, சென்னை வருகிறார்.அதன் தொடர்ச்சியாக, சென்னையில் இரு நாட்கள் தங்கும் அவர், கோபாலபுரத்தில், தன் தந்தை, கருணாநிதியையும், தாய் தயாளுவையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.