36
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூரட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திருட்டுத்தனமாக இயங்கிவந்த குடிதண்ணீர் இணைப்பின் மின் மோட்டார்களை கைப்பற்றினர்.
முத்துப்பேட்டையில் திருட்டுத்தனமாக இயங்கி வந்த மின் மோட்டார்களை பேரூராட்சி இயக்குனர் அவர்களுடைய உத்தரவின் பேரில் இன்று (24/04/18) காலை குடிநீர் வரும் நேரத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் 36 மின்மோட்டார்கள், மற்றும் 5 அடிபம்புகளும் அதிகாரிகளால் ஆய்வு செய்து மோட்டார்களை பறிமுதல் செய்யப்பட்டது.
அதுமட்யின்றி 15 அனுமதி இல்லாத குடிநீர் இணைப்புகளை துண்டிக்கப்பட்டது. இந்த ஆய்வு பேரூராட்சி செயலாளர் செந்தில் தலைமையில் இந்த ஆய்வு நடைபெற்றது.