47
அதிரை மக்களின் தேவைகளை மற்றும் கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு ஊரின் அனைத்து பகுதிக மக்களின் ஒற்றுமையுடன் ஊரை முன்னேற்றம் வகையில் அதிரை மேம்பாட்டுச் சங்கம் என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
உள்ளுர் , சென்னை மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் அதிரையர்களின் நலனிற்காக அறிமுகம் மற்றும் கொள்கை விளக்கும் நிகழ்ச்சி சென்னை மண்ணடியில் கடந்த 11/03/18 அன்று நடைபெற்றது.
இதனை அடுத்து அதிரை மேம்பாட்டு சங்கம் சார்பாக வருகின்ற 01/05/2018 அன்று அதிரை ரிச்வே கார்டனில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. எனவே இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அதிரை மக்கள் அனைவரையும் அதிரை மேம்பாட்டு சங்கம் சார்பில் அழைப்பு விடுத்துள்ளார்கள்.