96
தஞ்சை பெரியகோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
நகரின் நான்கு ராஜ வீதிகள் வழியாக நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம்பிடித்து இழுத்தனர்.
தஞ்சை பெரியகோவில் என அழைக்கப்படும் பெரியநாயகி உடனுறை ஸ்ரீபெருவுடையார் திருக்கோயிலில், சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு விழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெற்று வந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில், வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு, மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்தனர்.