Home » ஸ்பைடர் மேன், பேட் மேன் வேடமணிந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு செய்த இளைஞர்கள்..!!

ஸ்பைடர் மேன், பேட் மேன் வேடமணிந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு செய்த இளைஞர்கள்..!!

by
0 comment

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 2017 ல் மட்டும் 16,157 சாலை விபத்தில் இறந்திருக்கின்றனர், இந்திய அளவில் உத்தரபிரதேசம் (20,142) அடுத்தபடியாக தமிழ்நாடுதான் இரண்டாவது இடத்தில் இருக்கிறது, அதாவது ஒவ்வொரு நாளைக்கும் சராசரியாக 44 பேர் சாலைவிபத்தில் இறக்கின்றனர் அதே இந்திய அளவில் கடந்த ஆண்டில் (2017) மட்டும் 1,46,377 பேர் இறந்துள்ளதாக உச்சநீதிமன்ற சாலை பாதுகாப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

இப்படி ஆண்டு தோறும் நடக்கும் சாலை விபத்தில் பெரும்பான்மையினர் இளைஞர் என்பதை கருத்தில் கொண்டு கடந்த 2013 முதல் “தோழன்” என்ற இளைஞர் அமைப்பு தொடர்ந்து “விபத்தில்லா தேசம்” என்று வாரந்தோறும் எமன் உருவம், மைம், தெரு கூத்து, தொடர் மிதிவண்டியில் என பல வழிகளில், தலைக்கவசம் விழிப்புணர்வு, இருக்கை பட்டை விழிப்புணர்வு, பாதசாரிகளுக்கான விழிப்புணர்வு, முதல் ஸ்டாப் லைன், மது அருந்து வாகனம் இயக்குவதால் ஏற்படும் ஆபத்து என பல செய்திகளை பல முறைகளில் தொடந்து விழிப்புணர்வு செய்துவருகின்றது.

அந்த வகையில் 29வது சாலை விழிப்புணர்வு ஒட்டி அண்ணா வளைவில் நடைபெற்றது. இந்தமுறை திரையில் மட்டுமே தோன்றும் சூப்பர் ஹீரோக்கள் – ஸ்பைடர் மேன், பேட்மேன் மற்றும் சூப்பர் மேன் ஆகியோர் தரையில் தோன்றி சக மனிதர்களுக்கு சாலையை பாதுகாப்பாக கடக்க (Zebra Crossing), சாலையில் எப்படி வாகனத்தை எப்படி பாதுகாப்பாக இயக்குதல் போன்றவற்றை எடுத்து கூறி விழிப்புணர்வு செய்தனர்.

திரையில் மட்டுமே தோன்றிய “சூப்பர் ஹீரோக்கள்” நேராக பார்த்ததும் மக்களும் மகிழ்ச்சியடைந்தனர், அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டதுடன் “சாலை பாதுகாப்பு” உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.

Source :Newsu

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter