148
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் மஞ்சவயல் பகுதியில் கோவில் திருவிழா இன்று (30/04/18) திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த திருவிழாவில் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இங்கு இருதரப்பினர் இடையே சிறிய மோதல், வாக்குவாதம் மூலம் அடித்தடியாக மாறியுள்ளது.
இதனால் இரு தரப்பினரும் தாக்கி கொண்டதில் , ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரில் ஒருவரை மது பாட்டிலை உடைத்து கழுத்துப் பகுதி மற்றும் முதுகு பகுதியில் தாக்கியுள்ளனர்.
காயமடைந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இது குறித்து அதிராம்பட்டினம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முழு தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும். இணைந்திருங்கள் இணையத்துடிப்புடன்…