Home » “இந்தியாவின் சிறந்த குடிமகன் விருது” பெற்ற அதிரை வாலிபர் DR.N.முகமது ஜெஸீம்..!

“இந்தியாவின் சிறந்த குடிமகன் விருது” பெற்ற அதிரை வாலிபர் DR.N.முகமது ஜெஸீம்..!

1 comment

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் வாய்க்கால் தெரு பகுதியை சேர்ந்த H. நெய்னா முகமது அவர்களின் மகன் DR.N.முகமது ஜெஸீம் சென்னையில் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

அதுமட்டுமின்றி, இவர் மருத்துவ துறையில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறார்.
இவரின் இந்த சேவையை பாராட்டி மற்றும் ஊக்கவிக்கும் விதமாக “CHILD SCIENTIST AWARD” , “LIONS CLUB AWARD” போன்ற பல்வேறு விருதுகள் இவருக்கு அரசாங்கத்தாலும், அமைப்புகளாலும் அளிக்கப்பட்டுள்ளது.

இவர் தற்பொழுது உடல் சத்து மற்றும் மருத்துவ ஆராய்ச்சி குறித்து தனிமையாக தன்னுடைய பங்கினை அளித்தமைக்கு இந்திய அரசால் இன்று(01/05/2018) காலை பெங்களூரில் “இந்தியாவின் சிறந்த குடிமகன் தக்கப்பதக்க விருது” மற்றும் வெண்கலம் ,சான்றுதல் ஆகியவை வழங்கப்பட்டது.

இந்திய அளவில் இளைஞர்கள் உட்பட சுமார் ஏழு நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த விருது
BIOPHYSICS தலைவரால்” அதிரை வாலிபர் DR.N.முகமது ஜெஸீம் அவர்களுக்கு வழங்கப்பட்டது தமிழக மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, அதிரை மக்கள் இவரின் சேவைகளை பாராட்டும் விதத்தில், வாழ்த்துக்களை அல்லி குவித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter