தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஆம்புலன்ஸ் மற்றும் ஓட்டுனரை தாக்கிய குண்டர்களை உடனடியாக காவல்துறையினர் கைது செய்திட வேண்டும் என்று மல்லிப்பட்டிணம் SDPI கோரிக்கை வைக்கிறது.
கடந்த இருநாட்களுக்கு முன்னர் அதிரை அருகே மஞ்சவயலில் ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டனர்.அவர்களின் உடலை உடற்கூறாய்வு முடிவடைந்த நிலையில் பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் இருந்த பிரேதத்தை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல காவல்துறையினர் அழைத்ததின் பெயரில் பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.காவல்துறையினர் பாதுகாப்பு வாகனம்
உடலை கொண்டு செல்லும் வழியில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த சமூக விரோத கும்பல் ஆம்புலன்ஸை வழிமறித்து தமுமுக ஆம்புலன்ஸ் ஓட்டுனரை தாக்கியுள்ளனர்.காயத்தையும் பொருட்படுத்தாமல் உடலை இறந்தவரின் வீட்டில் சேர்த்து விட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
காவல்துறையினரின் அலட்சிப்போக்கால் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர் தாக்குப்பட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. ஆகவே இதில் ஈடுபட்ட அத்தனை பேரையும் உடனடியாக கைது செய்திட வேண்டும் என்று SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் கிளை கோரிக்கை வைக்கிறது.