Home » ஒரு மாநில தேர்தலுக்காக மற்றொரு மாநிலத்தின் வாழ்வாதாரத்தை நசுக்கும் மத்திய பாஜக அரசு !

ஒரு மாநில தேர்தலுக்காக மற்றொரு மாநிலத்தின் வாழ்வாதாரத்தை நசுக்கும் மத்திய பாஜக அரசு !

0 comment

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய பாஜக அரசின் துரோகங்கள் தொடருகின்றன. இப்போது கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் பிரதமரும் அமைச்சர்களும் பங்கேற்றிருப்பதால் மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற இயலவில்லை என இன்னொரு சாக்குப் போக்கை சொல்லி மீண்டும் தமிழகத்தின் முதுகில் குத்தியிருக்கிறது மத்திய பாஜக அரசு.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என 6 வார கால கெடு விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் 6 வாரம் கழித்து நீங்க சொன்னது ஸ்கீமா? வாரியமா? என கேள்வியை கேட்டது உச்சநீதிமன்றம்.
உச்சநீதிமன்றமும் உரிய விளக்கம் அளிக்காமல் நாங்கள் சொன்ன தீர்ப்பை செயல்படுத்த ஒருவரைவு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். மே 3ந்- தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த முறையும் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்திருக்கிறது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வரைவு அறிக்கையை இன்று தாக்கல் செய்யவில்லை. இதற்கு சொல்லியிருக்கும் அடேங்கப்பா காரணம்தான் அதிசயிக்க வைக்கிறது.

கர்நாடகா தேர்தல் பிரசாரத்தில் பிரதமரும் அமைச்சர்களும் இருக்கிறார்கள்.. ஆகையால் வரைவு அறிக்கைக்கான ஒப்புதலைப் பெற முடியவில்லை என பச்சை பொய்யை சொல்லியிருக்கிறது மத்திய பாஜக அரசு.

இதே மத்திய பாஜக அரசு நேற்றுதான் உச்சநீதிமன்றத்தில், வரைவு அறிக்கை இன்னும் தயாராகவே இல்லை; ஆகையால் 2 வார கால அவகாசம் கேட்டிருந்தது. இன்று வரைவு அறிக்கை தயாராகிவிட்டது; மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெற முடியவில்லை என ஜால்ஜால்ப்பு சொல்லியிருக்கிறது.

அதே நேரத்தில் மத்திய பாஜக அரசு, கர்நாடகா தேர்தல் நடைபெறுவதால்தான் மேலாண்மை வாரியத்தில் தமிழகத்துக்கு இத்தனை துரோகங்கள் என்பதை பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டிருக்கிறது. இதைத்தான் தமிழகம் தொடர்ந்து கூறியும் வருகிறது.
தற்போது இந்த உண்மையை உச்சநீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு. கர்நாடகா தேர்தல் முடிந்த பின்னராவது மத்திய பாஜக அரசு மேலாண்மை வாரியம் அமைக்குமா? அதன் துரோகங்கள் தொடருமா? என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter