Home » அதிரையர்களே…,டுர்ரட்டுட்டு… டுர்ர்ர்…!!

அதிரையர்களே…,டுர்ரட்டுட்டு… டுர்ர்ர்…!!

by
0 comment

 

அலோ…. சார் வண்டிய நிருத்துங்க….

சொல்லுங்க காக்கா எங்க போவனும்?

ஏரிபுறக்கரை மஸ்னி நகருக்கு போவனும்ப்பா… எவ்ளோ?

அருவது ரூவா…

சரிப்பா வண்டிய எடு…

டுர்ரட்டட்டு….டுர்…

நீங்க எந்த ஊரு காக்கா…

எனக்கு கூத்தாநல்லூர்… என் கூட சிங்கப்பூர்ல வேல பாத்த மொம்மானிபா இந்த ஊருதான், நடுத்தெரு, அப்போ ஒருதடவ இங்க வந்திருக்கேன் அப்போ பாத்த அதிராம்பட்டினம் இப்போ ரொம்ப மாறிடுச்சு! ஆனா இந்த ரோடுகள் மட்டும் அப்டியே இருக்கு…. பள்ளம் படுகுழி… பிரசவத்துக்கு போரவங்கள இந்தபக்க கூட்டிவந்தா சுக பிரசவம் ஆயுடும் போல….

ஹா ஹா ஹா …

தம்பி என்னப்பா சிரிப்பு ?

எல்லா ஊரும் முன்னேற்றம் கண்டு இருக்கு ஆனா இந்த ஊரு மட்டும் ஊடு கட்டுறதுல போட்டி போட்டு உடைக்கிற கல்லு மன்ன ரோட்டுல கொட்டுராங்க…. அந்த பாருங்க குப்பை… இவ்ளோ படிச்சசங்க இருக்கிற ஊர்ல எவ்ளோவோ விழிப்புணர்வு பன்னுரதா.. அதிரை எக்ஸ்பிரஸ் நெட்டுல பாக்குறேன்… இவ்ளோ செல்வந்தர்கள் உள்ள ஊர்ல… இப்படிப்பட்ட மக்களும் இருக்கத்தான் செய்ராங்க…ம்ம்ம்..

தம்பி நான் இவ்ளோ மோசமா உங்க ஊர பத்தி சொல்றேனே.. உனக்கு கோவம் வரல…

எதுக்கு காக்கா கோவம் வரனும்? உண்மைய சொன்னா ஒத்துகிட்டுதானே ஆகனும்…

ஒன்னுமில்ல… இப்ப பாருங்க நான் வட்டிக்கு வாங்கி இந்த ஆட்டோவ ஓட்டுறேன் இதுக்கு மாசா மாசம் ட்யூ கட்டனும் புள்ளைக்கு ஸ்கூல் பீஸ்.. எங்க உம்மாக்கு ஒடம்பு சரியில்ல… மருந்து மாத்தர… மருத்துவ செலவு… மொவளுக்கு அடிக்கிற வெயில்ல அக்குள்ள கட்டி… இப்படி என்னட வருமானத்துக்கு அதிகமா செலவு… என்னபன்னுறதுன்னே தெரியல…

தம்பி தம்பி நிறுத்துங்க…ம்ம்ம்

ஆமா அதிராம்பட்டினத்துக்கு ஏன் வந்திங்க?

அதுவா எனக்கு அதிராம்பட்டினத்துல வீடு வாங்கி குடியேற ரொம்ப நாளா ஆச… அதான் மஸ்னி நகர்ல கொரஞ்ச வெலைல மன விற்பனைன்னு நெட்டுல பாத்தேன் அப்டியே விசாரிச்சுட்டு போவலாம்ன்னு….

டுர்ரட்டுட்டு… டுர்ர்ர்….

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter