Home » தவறான தடுப்பூசியால் குழந்தை மரணம்?

தவறான தடுப்பூசியால் குழந்தை மரணம்?

by
0 comment

தவறான தடுப்பூசியால் குழந்தை மரணம்?

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தடுப்பூசி போடுவதற்காக சென்னையை சேர்ந்த தனது 5வயது மகளான தனுஷ்காவை பெற்றோர் அழைத்து வந்தனர், மருத்துவர்கள் அக்குழந்தையை பரிசோதிக்காமல் தடுப்பூசி போட்டதாக கூறப்படுகிறது.

தடுப்பூசி போட்ட சிறிது நேரத்தில் குழந்தையின் முகம் மற்றும் இதர பகுதிகள் ஊதா நிறத்தில் மாற தொடங்கிதை அடுத்து பதற்றமடைந்த பெற்றோர் அதே மருத்துவமனையில் உள் நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தொடர்ந்த நிலையில் பலனளிக்காத சிகிச்சையால் தனுஷ்க்கா உயிரிழந்ததாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது குறித்து மருத்துவர்கள் அலட்சிய போக்காக பதில் அளித்தைதை அடுத்து சம்பந்தபட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் ஏழு கிணறு காவல்நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். மேலும் உயரதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை (04-05-18) உடல் ராஜீவ் காந்தி மருத்துவமனை எடுத்து சென்று உடல்கூறு ஆய்வு நடைபெறும்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter