73
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஊர்களின் பட்டியலில் ஒன்றாகும்.
இங்கு சுமார் 34க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் உள்ளன.
திரும்பும் இடமெல்லாம் பள்ளிவாசல் என அதிராம்பட்டினம் மிகவும் செழிபடைந்து காணப்படும்.
இந்த ஊரில் செட்டி தெரு பகுதி மக்களுக்கு வசதியாக புதிதாக பள்ளிவாசல் கட்டுமான பணிகள் சுமார் 6மாதங்களுக்கு முன்னர் துவங்கியது.
இதனைத்தொடர்ந்து, பள்ளிவாசலுக்கு ஆயிஷா மஸ்ஜித் என பெயர்சூட்டப்பட்டு கட்டுமான பணிகள் துவங்கியது.
இந்நிலையில்,பள்ளிவாசலின் இறுதிக்கட்ட வேலைகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது.
இன்னும் ஒரு சில வாரங்களில் பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த ஆயிஷா மஸ்ஜித்தின் தோற்றங்கள்..