207
அதிரை எக்ஸ்பிரஸ்:- தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அமைந்துள்ள துலுக்கப்பட்டி என்ற கிராமத்தில் இன்று(05.05.2018) காலை இரு பிரிவினரிடையே மோதல்.
இச்சம்பவத்தில் பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது..சம்பவத்தில் வீடு கடைகளுக்கும்,கார்,பைக் ஆகியவற்றிற்கு தீவைத்து எரித்துள்ளனர்,சொத்துக்களையும் சூறையாடினர்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த அனைவரையும் தேனி மாவட்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இதுகுறித்து தேனி மாவட்டம் காவல்துறையினரிடம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.