195
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த மதுக்கூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் எனும் சமூக நல்லினக்க நிகழ்ச்சி இன்று (06/05/18) சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாற்றுமத சகோதரர்கள் கலந்து கொண்டு இஸ்லாம் குறித்த சந்தேகங்களை கேள்வி எழுப்பி அறிந்து கொண்டனர்.
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் கலந்துக்கொண்டு இஸ்லாம் பற்றி சந்தேங்களுக்கு விளக்கம் அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இறுதியாக தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த ராஜாமணி என்கிற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்டார்.