38
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நான்கு சக்கர வாகனம் இன்று(06/05/2018) சனிக்கிழமை திடீரென விபத்துக்குள்ளாகியது.
இன்று மதுக்கூரில் TNTJ சார்பில் நடைபெற்ற இஸ்லாம் ஓர்
இனிய மார்க்கம் என்னும் நிகழ்ச்சிக்காக பட்டுக்கோட்டை சாலை வழியாக மதுக்கூர் நோக்கி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த பி.ஜே அவர்களும் மற்ற நிர்வாகிகளும் வாகனத்தில்
வருகைதந்து கொண்டிருந்தனர்.
அப்போது பட்டுக்கோட்டை அருகே ஒரு நான்கு சக்கர வாகனம் (ஸ்கார்பியோ) மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது. இதைக்கண்ட
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
நிர்வாகிகள்
விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை
மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.