Home » “Dont touch here”… மொபைலை ஹேங் ஆக்கும் வாட்ஸ்அப் ஃபார்வர்டு மெசேஜ் உண்மையிலே வைரஸ்தானா ?

“Dont touch here”… மொபைலை ஹேங் ஆக்கும் வாட்ஸ்அப் ஃபார்வர்டு மெசேஜ் உண்மையிலே வைரஸ்தானா ?

0 comment

கடந்த சில நாள்களாக வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் வைரலாகப் பரவி வருகிறது. ” I can hang your WhatsApp for a while just touch below message” என்றும் அதற்கு அடுத்ததாகக் கீழே “don’t-touch-here” என்றும் அதில் இருக்கிறது. அதை க்ளிக் செய்தால் மொபைல் அப்படியே ஹேங் ஆகி நிற்கிறது. இதுபோல தொடக்கத்தில் இருந்தே பல மெசேஜ்கள் வாட்ஸ்அப்பில் வந்து கொண்டிருக்கின்றன. இவை உண்மையாகவே வைரஸ்தானா என்று நிச்சயமாக இல்லை. அதுவும் வாட்ஸ்அப்களில் அனுப்பப்படும் சாதாரண மெசேஜ்கள் போன்றவைதான். ஆனால், சிக்கலான முறையில் மாற்றியமைக்கப்பட்டவை. அவைப் பார்ப்பதற்கு சில வார்த்தைகளாகத் தோன்றினாலும் அவற்றின் பின்னால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறியீடுகள் மறைந்திருக்கும். அதை சாதாரணமாக வாட்ஸ்அப்பில் பார்க்க முடியாது.

வாட்ஸ்அப் போன்ற ஆப்களின் மென்பொருளில் இருக்கும் சில பிழைகளை இதுபோன்ற மெசேஜ்களை உருவாக்குபவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். குறியீடுகளோ வார்த்தையோ குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமானால், அதை ரீட்(Read) செய்வதற்கு மொபைலுக்கு சில நொடிகள் அதிகமாகத் தேவைப்படலாம் . சிங்கிள் கிளிக்கில் ஆயிரக்கணக்கான எழுத்துகளை மொபைல் ரீட் செய்ய முயலும்போது ஏற்படும் விளைவுதான் சில நொடிகளுக்கு ஹேங் ஆகி நிற்பது. இதுபோன்ற ஸ்பேம் மெசேஜ்களை உருவாக்குவதற்கென தனியாக இணையதளங்களும், ஆப்களும் இருக்கின்றன. இதன் மூலமாக ஒரு பத்து எழுத்துகள் கொண்ட வார்த்தைகளுக்குப் பின்னால் ஆயிரக்கணக்கான எழுத்துகளை(Characters) புகுத்தி விட முடியும். இதை உருவாக்குபவர்கள் விளையாட்டுத்தனமாக இதுபோல மெசேஜ்களைத் தயார் செய்து பரவ விடுகிறார்கள். இதை கிளிக் செய்தால் மொபைலுக்கு ஏதாவது ஆகி விடுமோ சிலர் பயப்படுவார்கள். ஆனால், அப்படிப் பயப்படும் அளவுக்கு இதில் ஒன்றும் இல்லை என்பதுதான் விஷயம்.

அதையும் மீறித் தெரிந்தோ தெரியாமலோ இதுபோன்ற மெசேஜ்களை கிளிக் செய்துவிட்டாலும் கூட மொபைல் சில வினாடிகள் ஹேங் ஆகி நிற்கும். அதன் பிறகு சாதாரண நிலைக்கு வந்து விடும் அவ்வளவுதான். வேறு எந்த பாதிப்புகளும் இதனால் ஏற்படாது. ஆண்ட்ராய்டில் மட்டும்தான் என்றில்லை. ஐஒஸ்-ஸிலும் கூட இந்தப் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் ஒரே ஒரு தெலுங்கு எழுத்து ஐபோன்களில் சிக்கலை ஏற்படுத்தியது. அந்த எழுத்தை ஒருவருக்கு அனுப்பினால் அதைத் திறந்து படிக்கும் முன்பே ஐபோன் கிராஷ் ஆனது. பின்னர் ஒரு அப்டேட் மூலமாக அந்தப் பிரச்னை சரி செய்யப்பட்டது. இதுபோல மெசேஜ்களால் மொபைல் ஹேங் ஆகாமல் தடுப்பது எப்படி என்ற கேள்வி பலருக்குத் தோன்றலாம் அதற்கும் ஒரு வழி இருக்கிறது ‘மெசேஜை பார்த்தவுடன் அழித்து விடவும்’.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter