73
நடுத்தெரு கீழ்புறம் நான்காவது சந்தில் இடியப்பம் விற்க்கும் வீட்டின் மேற்கூரை இன்று பிற்பகல் திடீரென தீ பற்றியது.
மதிய நேரம் என்பதால் தீ மள மளவென பரவி கொட்டகை முழுதும் பரவியதை அடுத்து அக்கம்பக்கத்தினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதனிடையே தீயணைப்பு ஊர்திக்கு தகவல் அளிக்கப்பட நிலையில் தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதால் மீண்டும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டன.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் தீக்கு இறையாகும் அதிரையில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாகவே உள்ளன.