Home » அதிரை அருகே ஒருவர் அடித்துக் கொலை, உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு!!

அதிரை அருகே ஒருவர் அடித்துக் கொலை, உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு!!

0 comment

தொக்களிக்காடு கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து (வயது 40) தகப்பனாரின் பெயர் காசிநாதன் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

நேற்று இரவு(07.05.2018) தொக்களிக்காட்டு கிராமத்தில் நடந்த தகராறில் மாரிமுத்து மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

அதனை தொடர்ந்து மறுநாள் காலை(08.05.2018) அவரது உடலை கண்டெடுக்கப்பட்டு தமுமுக அவசரஊர்த்தி மூலம் அதிரையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டவரப்பட்டது.

மாரிமுத்துவின் உடலை அதிரை அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனை செய்யப்பட்டது.பின்னர் அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்,மாரிமுத்துவின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர்.

இதில் உறவினர்கள் கூறுவதாவது காவல்துறையானது முறையான வழக்கு பதிவு செய்யவில்லையென்று உடலை வாங்க மறுத்துவிட்டு சென்று விட்டனர்.

அதனைத்தொடர்ந்து
மருத்துவமனையில் சற்று பரபரப்பான சூழ்நிலை நிலவியது, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

காவல்துறையினரிடம் உறவினர்கள் முறையிட்டும் சரியான தீர்வு கிடைக்காத காரணத்தினால் உடலை வாங்க மறுத்துவிட்டனர், பின்பு அவசர ஊர்த்தியில் ஏற்றப்பட்ட மாரிமுத்துவின் உடலை மருத்துவமனையிலேயே உடலை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter