163
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகேயுள்ள புதுக்கோட்டைஉள்ளூர் பகுதியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி இன்று பகல்(08.05.2018) விபத்துக்குள்ளானது.
அதிரையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு சென்ற இருசக்கர வாகனமும்,பட்டுக்கோட்டைலிருந்து வந்த காரும் நேருக்கு நேர் மோதி புதுக்கோட்டை உள்ளூர் அருகே விபத்துக்குள்ளானது.
இதில் இருசக்கர வாகனத்தின் முகப்பு பகுதி முற்றிலும் நொறுங்கி சேதமடைந்துவிட்டது. இருசக்கரவாகனத்தில் வந்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் கூறுகையில்:-
இப்பகுதியில் அதிகமாக விபத்துக்கள் நடப்பது என்பது எளிதாகிவிட்டது . இந்த சாலையில் வேகத்தடை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.