Home » புதுக்கோட்டை SDPI கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாக்குதல், முழுத்தகவல்(படங்கள்)!!!

புதுக்கோட்டை SDPI கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாக்குதல், முழுத்தகவல்(படங்கள்)!!!

by admin
0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்:- SDPI கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர் செய்யது அவர்களை பயங்கர ஆயுதங்களுடன் இந்துத்துவ ஆர்எஸ்எஸ், இந்துமுண்ணனி,பாஜக கும்பல்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் பலத்தகாயமடைந்த புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜிப்பட்டினம் செய்யது மணமேல்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கும் போது மருத்துவமனைக்கும் வந்து சிகிச்சை அளிக்க கூடாது என்று கூறி மருத்துவமனை,மருத்துவமனை ஊழியர்கள் செய்யது அவர்களின் மனைவி என அனைவரையும் 25 பேர் கொண்ட பாஜக,இந்து முண்ணனி அமைப்பினர் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து SDPI கட்சியின் வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் அதிரை நிஜாம்,சட்டக்கல்லூரி மாணவர் ஹவாஜா,புதுக்கோட்டை மாவட்ட தலைவர் சாலிஹ் மரைக்காயர், மாவட்ட பொதுச்செயலாளர் சரபுதீன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொண்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மெடிக்கல் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து தொலைபேசி வாயிலாக வழக்கறிஞர் அதிரை நிஜாம் நம்மிடம் தெரிவிக்கையில், எங்களுடைய போராட்டம், ஜனநாயக ரீதியாக தொடரும், குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை போராடுவோம் மேலும் அவர் கூறுகையில் கலவரங்களை ஏற்படுத்தும் வண்ணம் நடத்தப்பட்ட தாக்குதலை அரங்கேற்றியவர்களை உடனடியாக காவல்துறை கைது செய்யவேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருப்பதாக தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter