67
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அமீரகம் வாழ் கீழத்தெரு முஹல்லா வாசிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று(11/05/2018) துபாய் நக்கீல் பகுதியில் உள்ள மலபார் ரெஸ்டாரண்டில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அமீரகத்தில் உள்ள அதிரை கீழத்தெரு வாசிகள் திரளாக கலந்து கொண்டு தப்பிகளுடைய ஆலோசனைகளையும் கருத்துகளையும் தெரிவித்தனர்.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தலைவர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இனி வரும் காலங்களில் சந்தா வசூல் செய்தல் மற்றும் பல்வேறு சேவைகளுக்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.