Home » ஆதாரம் இருந்தும் அலட்சியம் காட்டும் அதிரை காவல்துறை !!

ஆதாரம் இருந்தும் அலட்சியம் காட்டும் அதிரை காவல்துறை !!

0 comment

அதிரையில் லாட்டரி விற்பனை ஜோர் !

ஆதாரத்தை காட்டியும் அலட்ச்சியப்படுத்துமா? காவல்துறை !!

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த லாட்டரி தடை சட்டத்தை கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பாரும் பாராட்டினர்.

அம்மாவின் ஆயுட்காலம் காலம் வரை அலார்ட்டாக கண்காணித்த காவலர்கள், உயரதிகாரிகள் ஜெயாவின் மறைவுக்கு பின் கண்டும் காணாதது போல் செயலாற்றி வருகின்றனர், ஆதலால்தான் இன்றைய இளைஞர்கள் போதை வஸ்த்துக்களுக்கு அடிமையாகும் அவலம் நகரங்களை கடந்து குக்கிராமங்களையும் அடைந்துள்ளன.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பல்வேறு கிராமங்களை உள்ளடக்கிய பேரூராகும், அருகில் உள்ள விவசாயிகள் முதற் கொண்டு பாமர ஏழைகள் பஞ்சம் பிழைக்க பேரூர்களை நாடுகின்றனர் அவ்வகையில் அதிரையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பிழைப்பு நாடி அதிரைக்கு வருகின்றனர்.

அவர்களை குறிவைத்து கள்ள சந்தை லாட்டரி வியாபாரிகள் கொள்ளை லாபத்தில் கள்ள லாட்டரிகள் விற்று வருகின்றனர்.

இதனால் அப்பாவி எழை தொழிலாளர்கள் வாங்கும் சம்பளத்தை அப்படியே லாட்டரிக்கு தாரை வார்த்துவிட்டு வெற்றுக்கையுடன் ஊர் திரும்புகின்றனர்.

இதனால் கணவன் மனைவிக்கிடையே பிரச்சினை, பசியால் வாடும் அவலம் என பட்டியல் நீண்டு கொண்டே சென்று இறுதியாக தற்கொலை என உயிரை மாய்த்துக்கொள்கின்றனர்.

தனியொரு மனிதனுக்கு உனவில்லையெனில் ஜகத்தினை அழித்துவிடுவோம்

இதுகுறித்து தமிழக காவல் துறையிடம் பல்வேறுபட்ட புகார்கள் குவிந்துள்ள நிலையில்.

அதிரையில் தலைவிரித்தாடும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை தோலுரிக்கும் விதமாக சுவரொட்டிகள் அடித்து நகரெங்கும் ஒட்டப்பட்டன.

இதிலும் விழிப்படையாத அதிரை காவல் துறை வாலை விட்டு தும்பை தேடும் நிலைக்கு சென்று கொண்டுள்ளன.

ஆம் அதிராம்பட்டினம்

@ தக்வாப்பள்ளி பிரதான கேட்டுக்கு எதிராக உள்ள சந்தில் உள்ள ஒரு உணவகத்தில் கனஜோராக லாட்டரி விற்பனை அப்பட்டமாக நடைபெறுகிறது.

கடைத்தெரு கிராணி மளிகை எதிரே உள்ள அல்-மதினா எலக்ட்ரிக் என்ற பெயரில் போலியான முறையில் லாட்டரி சேல்ஸ் மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அட்ரசை தேடி அலைய வேண்டாம் காவல்துறையே நடவடிக்கை எப்போது?

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும்!

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter