Home » சிறையில் நோன்பாளிகளுக்கு உணவு வழங்க அனுமதி வேண்டும்., தமுமுக பொது செயலாளர் கோரிக்கை..!

சிறையில் நோன்பாளிகளுக்கு உணவு வழங்க அனுமதி வேண்டும்., தமுமுக பொது செயலாளர் கோரிக்கை..!

0 comment

உலக நாடுகள் முழுவதும் இன்னும் ஓரிரு நாட்களில் இஸ்லாமியர்களின் புனிதமிகு ரமலான் நோன்பு ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், தமிழகத்திலும் இஸ்லாமியர்கள் பல லட்சக்கணக்கானோர் நோன்பு வைப்பது வழக்கம்.

இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள சிறைகளில் பல வருடங்களாக வாடிவரும் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்க மற்றும் நோன்பு துறக்க உணவுகள் வழங்கப்படவேண்டிய சூழ்நிலையால் உணவு வழங்க அனுமதி வழங்க கோரி சிறைத்துறை கூடுதல் இயக்குனர் அவர்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில பொது செயலாளர் ஹைதர் அலி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள கோரிக்கையில் வருகிற 17.05.2018 அன்று முதல் நோன்பு அரம்பிப்பதால் மத்திய சிறைகளில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு நோன்பு நோற்க மற்றும் நோன்பு துறக்க உணவுகள் சிறைக்கு உள்ளே கொண்டு செல்ல அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்..

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter