தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் காவல் நிலையம் அருகே அனுமதி இன்றி மது பானங்கள் விற்பனை.
அதிராம்பட்டினம் காவல் நிலையம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மது கடை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்டது, ஆனால் இந்த உத்தரவை பெரிதும் கண்டுகொள்ளாமல். உத்தரவை மீறி மது விற்பனை செய்து வருகின்றனர்.
மது கடை மூடப்பட்டாலும் மறைமுகமாக கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஒரு பெட்டி கடையில் மதுபானங்களை வழக்கம்போல் விற்பனை செய்து வருகின்றனர்.
இது குறித்து அதிரை காவல் நிலையத்தில் பலமுறை புகாரலித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுகின்றனர் காவல்துறையினர்.
அதுமட்டுமின்றி டாடா மேஜிக் வேனில் சட்டத்திற்கு மாறாக மதுபானங்களை ஏற்றிவந்த வாகனமும் விபத்துக்குள்ளானது அப்பொழுதும் பொதுமக்களால் விபத்துக்குள்ளான வாகனத்தை சிறைபிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஆதாரபூர்வமாக வழக்கு கொடுத்தனர் அதனையும் கண்டுகொள்ளாததால்.காவல் துறையின் அலட்சியபோக்கை கண்டித்து ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது.
அதன் அடிப்படையில் இன்று (13/05/2018) பெட்டிகடைக்குள் வைத்து வியாபாரம் செய்யும் மது பாட்டில்களை வீடியோ பதிவாக வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
வீடியோ இணைப்பு:-