Home » ஊழல் மாநிலங்களில் தமிழகம் முதலிடம்..!!

ஊழல் மாநிலங்களில் தமிழகம் முதலிடம்..!!

0 comment

ஊழல் அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சி.எம்.எஸ். இந்தியா நிறுவனம், “ஊழல் ஆய்வு 2018” என்ற தலைப்பில் பல்வேறு மாநிலங்களில் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. கடந்த வாரம் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவு குறித்து சி.எம்.எஸ். இந்தியா நிறுவனத்தைச் சோ்ந்த அலோக் ஸ்ரீவஸ்தா கூறுகையில், “நாடு முழுவதும் பல மாநிலங்களில் அரசு சேவைகளை பொதுமக்கள் பெறுவதில் உள்ள ஊழல் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

அரசு சேவைகளைப் பெறுவதில் லஞ்சம் பெறுவது தமிழ்நாட்டில் அதிகமாக இருப்பது தொிய வந்துள்ளது. ஊழல் பட்டியலில் தமிழ்நாடு தான் முதல் இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் தெலங்கானா, 4வது இடத்தில் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மாநிலங்களில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மிகவும் குறைவாகவே உள்ளன.

மேலும் பஞ்சாப், குஜராத் மாநிலங்களிலும் ஊழல் தடுப்பு மிக மோசமாகவே உள்ளது. ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் ராஜஸ்தான், கா்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்கள் ஓரளவு கவனம் செலுத்துகின்றன.
குறிப்பாக போக்குவரத்து, காவல்துறை, வீட்டு வசதி, நில ஆவணங்கள், சுகாதாரம், மருத்துவமனை போன்ற இடங்களில் ஊழல் அதிகமாக நடப்பது தொியவந்துள்ளது. ஆதாா் அட்டை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக 7 சதவீத மக்களும், வாக்காளா் அடையாள அட்டை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக 3 சதவீத மக்களும் தொிவித்துள்ளனா்” என்றார்.

Source:- NewsTm | தமிழன் எக்ஸ்பிரஸ்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter