Home » அதிரையில் மறக்கடிக்கப்படும் சேதுரோடு !

அதிரையில் மறக்கடிக்கப்படும் சேதுரோடு !

0 comment

அதிரையில் மறக்கடிக்கப்படும் சேதுரோடு

அதிராம்பட்டினம் ! பல்வேறு வரலாற்று பொக்கிஷங்களை கொண்ட பேரூர்தான் என்பதன் அத்தாட்ச்சிகள் நிறையவே உள்ளன.

அந்தவகையில் தான் தற்போது எல்லோராலும் அழைக்கப்படும் ECR ரோடு சமிப காலம் வரையில் சேது ரோடு என அழைத்து வந்தோம்.

சமிபத்தில் அவ்வழியாக வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம், வெளி மாநில ஊர்திகள் புழங்கும் இச்சாலையை ECR ECR என பொது மக்களும், வணிக நிறுவன பதாகைகளும் பதிந்த நிலையில் மக்கள் மத்தியிலும் பதிய ஆரம்பித்துள்ளன.

ஆனால் இந்த சேது ரோடு என்ற பெயர் சீது நபியவர்களின் பெயரை கொண்டதாகவும், காலப்போக்கில் மருவி சேது என அழைக்கப்படுவதாக வரலாற்று ஆதரங்கள் நிறையவே உள்ளன.

தமிழகத்தில் சேது என்றபுழங்கப்படுவதை காணலாம், சீது நபி அவர்களின் பெயர் தான் சேது என்று மாறிவிட்டது என்றும் வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள்

கடவுள் அருளின் நெறியாலே கனிந்த நூரே முகம்மதுவின்
படர் பே ரொளிகள் சீதுநபி பற்றி அவர்தம் நெற்றியிலே
தொடர்வான் நெறியின் படிஒளிரத் தூய நபிகள் தலைமுறைகள கடன்செய் முறையால் வையத்தில் காலந்தோறும் எழுந்தனவே18

மேற்கண்ட வாக்கியங்கள் கூகுல் தேடு பொறியில் ஏராளமாக காணக்கிடைக்கின்றன.

எனவே சேது சாலையில் உள்ள வணிக நிறுவன பாதாகைகளை சேது ரோடு என மாற்றம் செய்து வரலாற்று உண்மைகளை வரும் சமூதாயத்திற்கு எத்தி வைக்க முற்படுவோம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter