Home » திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கைது.,பட்டுக்கோட்டையில் திடீர் சாலை மறியல்..!

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கைது.,பட்டுக்கோட்டையில் திடீர் சாலை மறியல்..!

by
0 comment

திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் கைது நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் அக்கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வருகிறது.

தூத்துக்குடி சம்பவம் குறித்து முதலமைச்சரிடம் பேச அனுமதி வழங்கவில்லை என கூறி தலைமை செயலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அக்கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகில் தளபதி அவர்களை கைது செய்ததைக் கண்டித்து விடுதலை செய்யக்கோரி சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.அதில் ஏனாதி.பாலு, A.அப்துல் சமது,பழஞ்சூர் K.செல்வம், லண்டண் கோவிந்தராஜ் இராம.குணசேகரன் A.M.Y.அன்சர்கான்.C.V.N.கோவைத் தம்பி,மற்றும் கழக உடன் பிறப்புகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

You Might Be Interested In

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter