99
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் லஞ்சம் வாங்கியதால் சார்பு பதிவாளர் கைது.
முத்துப்பேட்டை பகுதியில் சார்பு பதிவாளர் த.உதயக்குமார் தொடர்ச்சியாக பல நபர்களிடம் லஞ்சம் பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று 30/05/2018 புதன்கிழமை சார்பு பதிவாளர் அலுவலகத்தில் நாகை லஞ்சம் ஒழிப்பு துறை அதிகாரி அருள் பிரியா லஞ்சம் ஒழிப்புதுறை குழுவினர்களுடன் வந்து அலுவலகத்தில் ஆய்வு மேற்க்கொண்டனர்.
இதன் பிறகு ஆய்வு மேற்கொண்டதில் சார்பு பதிவாளர் 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கும் பொழுது நாகை லஞ்சம் ஒழிப்பு துறை அதிகாரிகள் த.உதயகுமாரை கையும் களவுமாக கைது செய்தனர்.