10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தமிழ் பாடத் தேர்வு இரண்டு தாள்களாக இல்லாமல் ஒரே தேர்வாக நடத்தப்படும்
என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில், பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது சட்டமன்ற உறுப்பினர் செம்மலை எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்அ
ப்போது பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அவர் கூறியதாவது
தனியார் பள்ளிகளில் 4 வயதுக்கு முன்னரே குழந்தைகளை சேர்ப்பது தொடர்பாக உரிய சட்டவிதிகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வருகைப்பதிவுக்கு பயோமெட்ரிக் முறை ரூ.9 கோடி செலவில் அமல்படுத்தப்படும்.
10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான தமிழ் பாடத் தேர்வு தமிழ் முதல் தாள், தமிழ் இரண்டாம் தாள் என்று இரண்டு தாள்களாக இல்லாமல் ஒரே தேர்வாக நடத்தப்படும்.
மதிப்பெண் சான்றிதழ் கிழிந்துவிடாமல் இருக்கும் வகையில் வரும் ஆண்டிலிருந்து கிழியாதபடா காகிதத்தில் சான்றிதழ் வழங்கப்படும்
10, 12ம் வகுப்புகளுக்கு இனி தமிழ்தேர்வு ஒரு தாள் மட்டும் தான்- கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு !!!
157