43
முத்துப்பேட்டை ஆசாத் நகர் புதிய பேருந்து நிலையம் அருகில் சாலை விபத்தில் கால் முறிந்த மாற்று மத இளைஞரை மீட்ட முத்துப்பேட்டை முஸ்லீம் இளைஞர்கள் அவரை முதலுதவிக்காக துரிதமாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
தெற்குகாட்டை சேர்ந்த சந்தோஷ் என்ற சகோதரருக்கு கால் முறிந்துவிட்டது. இதனை அறிந்த இளைஞர்கள் உடனடியாக முத்துப்பேட்டை தமுமுக ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்பு அடிபட்டவரின் குடும்பத்திற்க்கு உடனே தகவல் கொடுத்து அவர்கள் வரும் வரை காத்திருந்து பெற்றோர் வந்த பிறகு தேவையான உதவிகளை செய்து கொடுத்துவிட்டு சென்றனர்.