Home » அதிரை சுற்றுச்சூழல் மன்றத் தலைவரின் சேவைகளை பாராட்டி சிறப்பு விருது வழங்கி கவுரவிப்பு !!

அதிரை சுற்றுச்சூழல் மன்றத் தலைவரின் சேவைகளை பாராட்டி சிறப்பு விருது வழங்கி கவுரவிப்பு !!

0 comment

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இன்று உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. இன்று காலை பல்கலைக்கழக பேரவைக் கூடத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மற்றும் மூலிகை அறிவியல் துறை சார்பில் இவ்விழா நடைபெற்றது.

இவ்விழாவில் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலய பாதுகாப்பு , அலையாத்திக்காடுகள் பாதுகாப்பு , கோவில்காடுகள் பாதுகாப்பு , அதிராம்பட்டினம் பேருராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் போன்ற பணிகளை திறம்பட செய்தமைக்காக சமூக ஆர்வலரும் , அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் தலைவருமான வ. விவேகானந்தன் அவர்களுக்கு தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில் பொன்னாடை அணிவித்து , கேடயம் வழங்கி சிறப்பித்தார்கள்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter