44
அதிரை எக்ஸ்பிரஸ்:- மாலை முதல் கனமழை பெய்த நிலையில் பெரிய கோவிலின் இரண்டாவது நுழைவு வாயிலான கேரளாந்தகன் கோபுரத்தின் இடது புறத்தில் இடி தாக்கியது. 90 அடி உயரம் உள்ள அந்த கோபுரத்தின் மீது இடிதாங்கி அமைக்கப்பட்டிருந்த போதிலும், அந்த இடிதாங்கியும் சேதம் அடைந்து கோபுரத்தின் மேல் பகுதியில் இருந்த யாழி சிற்பமும் சேதம் அடைந்தது.
சேதம் அடைந்த யாழி சிற்பம் கோபுரத்தின் மேலேயே விழுந்துவிட்டதால் பக்தர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை இடிதாங்கி இல்லாமல் இருந்திருந்தால் கோபுரத்துக்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. கோபுரம் சேதம் அடைந்ததையடுத்து பரிகார பூஜைகளுக்குப் பின் இரண்டொரு நாளில் சீரமைப்புப் பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.