40
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் மின்வாரியத்திற்கு உட்பட்ட சுரைக்கா கொள்ளை பகுதியில் அமைந்து உள்ள மின்கம்பம் பலவருடமாக பழுதுஅடைந்து ஆபத்தானநிலையில் காணப்படுகிறது. இது குறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாக பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்..
இந்த மின்கம்பம் மிகவும் முக்கிய சாலையான உமர் பள்ளி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. அந்த சாலையினை பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையாக உள்ளது.சிறுவர்கள் விளையாடும் இடமாகவும் உள்ளதால் மின்வாரிய அதிகாரிகள் இதனை கருத்தில்கொண்டு உடனே புது மின்கம்பம் அமைத்து தருமாறு தெருவாசிகள் கோரிக்கைவைத்து உள்ளனர்.