58
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் தட்டா தெருவை சேர்ந்த மெளாலானா அ.மு.க.ஜெக்கரியா அவர்கள் நேற்று (11/06/2018) அன்று அதிராம்பட்டினத்திலிருந்து குடும்பத்துடன் காரில் சென்னை செல்லும்போது அரியலூர் அருகில் வாகனம் விபத்து ஏற்பட்டுள்ளது.
பலத்தகாயம் ஏற்பட்டு தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அவசர சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார்,பிறகு தற்போது மேல் சிகிச்சைக்காக சென்னை தி.நகர் பகுதியில் உள்ள பாரதி ராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஜெக்கரியா மெளாலானா மற்றும் அவர்களின் குடுபத்தார்களுக்கும் உடல்நலம் குணமடைய இறைவனிடம் பிராதிப்போம்…