நோன்பு பெருநாள் தொடர்பாக இருவேறு கருத்துக்கள் நிலவி வந்த நிலையில், நேற்று மாலை 7 மணியளவில் குளச்சல் பகுதியில் பிறை பார்த்ததாக அல்லாஹ் மீது ஆனையிட்டு வெளி வந்த வீடியோ ஆதராரத்தை வைத்து ததஜ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நோன்பு நோர்பதை நிறுத்த சொல்லி அறிவுரை வழங்கி உள்ளார்கள்.
ஷவ்வால் பிறை முதல் நாள் அன்று நோன்பு நோற்பது ஹராமாகும் எனவும் ததஜவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் செய்தி வெளியாகி உள்ளன.
இதனிடையே மண்ணடி லிங்கி செட்டி தெருவில் சோசியல் ஆர்கனைசேஷன் சார்பில் பெருநாள் தொழுகைக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.