Home » மல்லிப்பட்டினம் நகர SDPI கட்சியின் பெருநாள் வாழ்த்து செய்தி…!

மல்லிப்பட்டினம் நகர SDPI கட்சியின் பெருநாள் வாழ்த்து செய்தி…!

by admin
0 comment

அன்பிற்கினிய என்‌ சகோதர ! சகோதரிகளுக்கு !

எங்களது இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு ,இந்த நன்னாளில் சிறுபான்மைச் சமூகமும்,உழைக்கும் மக்களும் ஒருங்கிணைந்த அரசியல் சக்தியாய் எழுச்சிபெற உறுதியேற்போம்…

நமது ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பு இருப்பது ரம்ஜான் மாதம் முழுவதும், அதனை வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிற உலகெங்கும் வாழ்கிற அனைவருக்கும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா வின்(SDPI) கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டினம் நகரம் சார்பில் இனிய ரமலான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

பெருமானார் கண்மணி நாயகம்( ஸல்) அன்னவர்கள் வழிகாட்டுதலின்படி உலகில் அன்பு பெருகவும், அமைதி நிலைபெறவும் ஒவ்வொருவரும் நோன்பிருந்து கடமையாற்றுவது போற்றுதலுக்குரியதாகும்.

இஸ்லாம் என்னும் வாழ்க்கைநெறி பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வைக் கற்பிக்காத ஒரு மகத்தான தத்துவமாகும். மனிதர்களுக்கிடையில் வெறுப்புணர்வை விதைக்காமல் மனிதநேயத்தை போதிக்கிறது.

இஸ்லாம் என்னும் மானுடத்தைப் போற்றும் இந்த வாழ்வியல் நெறியைக் கடைபிடித்து சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் காப்பாற்றிவரும் உறவுகள் யாவரும் வளமுடன் நலமுடன் பெருவாழ்வு வாழ SDPI கட்சியின் சார்பில் வாழ்த்துவதுடன், முஸ்லிம்கள்,கிறித்தவர் உள்ளிட்ட சிறுபான்மைச் சமூகத்தினரும், தலித்துகள் பழங்குடியினர் உள்ளிட்ட பிற உழைக்கும் மக்களும் ஒருங்கிணைந்த அரசியல் சக்தியாய் எழுச்சிபெற வேண்டுமென இந்த இனிய நன்நாளில் ரமலான் திருநாளில் உறுதியேற்போம்.

இவன்….

SDPI கட்சி,
மல்லிப்பட்டினம் நகரம்
தஞ்சை தெற்கு மாவட்டம்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter