Home » லாப நோக்கில் இயங்குகிறதா அதிரை பைத்துல்மால்?

லாப நோக்கில் இயங்குகிறதா அதிரை பைத்துல்மால்?

2 comments

அதிரை பழஞ்செட்டி தெருவில் வசித்து வரும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் விமலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயதான இவரை பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அதிரை பைத்துல்மால் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றுள்ளனர். இதற்காக அந்த ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த மூதாட்டியின் உறவினர்களிடம் அதிரை பைத்துல்மால் நிர்வாகம் ரூ.2000 கட்டணமாக கேட்டதுடன் குறைக்கவும் முடியாது என திட்டவட்டமாக சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் ரூ.2000தை கொடுத்துவிட்டு அதற்கான ரசீதை பெற்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சமூக ஆர்வலர்கள், ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ஒரு நோயாளியை வெறும் 13 கிலோ மீட்டருக்கும் குறைவான பகுதியில் அமைந்திருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பைத்துல்மால் நிர்வாகம் இவ்வாறு அதிக கட்டணம் வசூல் செய்தது ஏன் என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

சிறியரக ஆம்புலன்ஸில் பட்டுக்கோட்டைக்கு செல்லவே இவ்வளவு கட்டணம் என்றால் தஞ்சாவூர் உள்ளிட்ட தொலைதூர ஊர்களுக்கு அரபு எமிரேட்ஸ் விமான டிக்கெட்டுக்கு நிகராக கட்டணம் வசூல் செய்வார்களா? என்றும் குமறுகின்றனர்.

மேலும் சேவைமனப்பான்மை என்ற ரீதியில் இயங்கும் பைத்துல்மால் அமைப்பு எதன் அடிப்படையில் ஆம்புலன்ஸ் கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு என்ன பதில் சொல்ல போகிறது அதிரை பைத்துல்மால்? பொறுத்திருந்து பார்ப்போம்.

You Might Be Interested In

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter