39
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஆஸாத் நகர் பகுதியில் அமைந்துள்ள மீன் மார்க்கெட்டை அகற்ற கோரி பாஜகவினர் H.ராஜா தலைமையில் கால வரையற்ற உண்ணாவிரதத்தை நாளை (20-06-2018) முதல் அறிவித்துள்ளனர்.
இது குறித்து பரபரப்புகளை உருவாக்கி, பதட்டத்தை பரப்புவது புத்திசாலித்தனமல்ல.
அங்கு தமிழக காவல்துறை அமைதியை சட்ட ரீதியாக நிலை நாட்டும் என நம்புகிறோம். அவர்கள் பாராபட்சமின்றி உரிய நடவடிக்கைகளை எடுக்க அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முத்துப்பேட்டையில் எல்லா சமூக மக்களும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழவே விரும்புகின்றனர். அதற்கு இடையூறு செய்ய வேண்டாம் என அனைத்து தரப்பையும் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்:-
நாச்சிகுளம் தாஜுதீன்
மாநில செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி