அதிரை எக்ஸ்பிரஸ்:- ஆலத்தூரில் நடைபெற்ற எழுவர் கால்பந்து தொடர்போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் அதிராம்பட்டினம் அணி 5 கோல் போட்டு அசத்தல் வெற்றி பெற்றது.
இன்று புதன்கிழமை(20.6.2018) நடைபெற்ற ஆட்டத்தில், அதிராம்பட்டினம் AFFA அணி, பட்டுக்கோட்டை சேது செவன்ஸ் அணிகள் மோதின. தொடக்க முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட முடிவில், அதிராம்பட்டினம் AFFA அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.