127
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நடுதெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே உள்ள செட்டியா குளத்தில் மீண்டும் கழிவு நீர் கலக்கப்பட்டு வருவதை தக்க ஆதாரங்களுடன் செய்தியாக பதிவிட்டு,அரசு பணம் ₹50லட்சம் வீணாகி விட்டது என்பன உள்ளிட்டவைகளை காணொளி காட்சிகளுடன் பதிவிட்டு இருந்தோம் இதனை அடுத்து உஷாரான அதிரை பேரூராட்சி நிர்வாகம் உடைபட்ட கால்வாயை உடனடியாக அடைத்து குளத்திற்க்குள் இறங்கும் நீரை தடுத்துள்ளன தற்காலிகமாக மணற் கொண்டு அடைத்துள்ளனர் என்றும், விரைவாக கான்கிரீட் கொண்டு அந்த உடைப்பை சரிசெய்து தருவதாக அதிகாரிகள் உறுதியுடன் கூரியதாக அப்பகுதி மக்கள் நம்மிடம் தெரிவித்துள்ளனர்.