Home » அதிக பணம் வசூல் செய்தது தவறு தான்! வருந்தும் அதிரை பைத்துல்மால்!!

அதிக பணம் வசூல் செய்தது தவறு தான்! வருந்தும் அதிரை பைத்துல்மால்!!

0 comment

17.06.2018 அன்று லாப நோக்கில் இயங்குகிறதா அதிரை பைத்துல்மால்? என்ற தலைப்பில் அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது. அதில் ஆம்புலன்ஸ் சேவைக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்தது குறித்து ஆதாரப்பூர்வமாக குறிப்பிட்டிருந்தோம்.

முந்தைய பதிவு இணைக்கப்பட்டுள்ளது:-

http://adiraixpress.com/லாப-நோக்கில்-இயங்குகிறதா/

இந்த செய்தி வெளியாகி அதிரையர்கள் மத்தியில் விவாத பொருளானது. அப்போது சிலர் அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகிகள் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக சேற்றைவாரி வீசினர். இந்நிலையில் சம்மந்தப்பட்ட நபரிடம் இருந்து அதிக கட்டணம் வசூல் செய்தது தவறு தான் என்று அதிரை பைத்துல்மால் நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக வசூல் செய்த ரூ.800/- ரொக்கத்தை சம்மந்தப்பட்ட நபரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனால் நெகிழ்ச்சியடைந்த பாதிக்கப்பட்டவர்கள் நமது அதிரை எக்ஸ்பிரஸ் நிர்வாகிகளை தொடர்புக்கொண்டு நன்றி தெரிவித்தனர்.

ஆனால் இதுகுறித்த அறிவிப்பு அதிரை பைத்துல்மாலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படாததால் இணையத்தில் பரவிய லெட்டர்பேடு தகவல் பொதுமக்கள் மத்தியில் தேவையில்லாத சந்தேகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் அந்த லெட்டர்பேடு அதிரை பைத்துல்மால் தரப்பில் தனியார் இணையதளம் ஒன்றின் வாயிலாக உலாவவிட்டது உறுதியாகி உள்ளது.

தவறை வெளிப்படையாக அதிரை பைத்துல்மால் ஒப்புக்கொண்டது வரவேற்க வேண்டிய ஒன்று. அதேசமயம் அதிரை எக்ஸ்பிரஸ் மீது சேற்றைவாரி வீசியவர்கள் தற்போது ஓடி ஒழிந்துக்கொண்டு பொய் பிரச்சாரத்தை தொடர்ந்து வருகின்றனர். பொதுமக்களிடம் வசூல் செய்து வெளிப்படையாக செயல்படும் ஒரு தொண்டு நிறுவனத்தை அதிரை எக்ஸ்பிரஸ் என்றும் அழிக்க நினைத்தது இல்லை. அப்படி அந்த அமைப்பு அழிந்தால் அது அவர்களின் தவறான செயல்பாடுகளாலேயே அழியுமே தவிர அதை அதிரை எக்ஸ்பிரஸ் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆதலால் தவறை சுட்டிக் காட்டினால் அதை நிவர்த்தி செய்து முன்னேறி செல்வதே ஆரோக்கியமான நிர்வாகமாக திகழும்.

எந்தவொரு தனிநபரையோ, இயக்கத்தையோ, அமைப்புகளையோ விமர்சித்து எழுதுவது அதிரை எக்ஸ்பிரஸின் நோக்கமல்ல, மாறாக தவறுகளை தக்க ஆதாரத்துடன் வெகுஜன மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டும் பாதையிலேயே தொடர்ந்து பயணிக்கிறோம்.

ஆதலால் அதிரை எக்ஸ்பிரஸில் விருப்பு, வெறுப்புகளுக்கு ரிசர்வேஷன் மட்டுமல்ல அன்ரிசர்வேஷனிலும் இடம் அளிக்காமல் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதனை உறுதியாக தெளிவுப்படுத்திவிடுகிறோம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter