202
தஞ்சாவூர் மாவட்டம் ,
அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் நோக்கி வந்த கொரியர் வாகனம் எதிர்பாராவிதமாக
பேரூந்துநிலையம் அருகில் உள்ள மின் கம்பத்தில் (ட்ரான்ஸ்ஃபார்மரில்) மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் ஏற்பட்ட உடனே வாகன ஓட்டுநர் மின்சாரம் பாயும் முன் வாகனத்தில் இருந்து இறங்கி விபத்தில் இருந்து அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதையடுத்து பொதுமக்கள் அதிரை மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு மின்சாரத்தை துண்டிக்க செய்து விபத்தில் சிக்கிய வாகனத்தை மீட்டனர். இந்த விபத்தினால் அப்பகுதி சற்று பரபரப்பாக காணப்பட்டது…
மின் வாரிய அதிகாரிகள் சரியான நேரத்தில் மின்சாரத்தை துண்டித்து நடக்கவிருந்த பெரும் அசம்பாவிதத்தை தடுத்தனர்.