“ரயில் நிலையங்களில் இனி ‘செல்ஃபி’ எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த சட்டமானது இன்று (22.06.2018) வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் ‘செல்ஃபி’ பழக்கம் மக்கள் மத்தியில் மிக வேகமாக பரவி வருகிறது. இத்தகைய ‘செல்ஃபி’ கலாச்சாரத்திற்கு இளைஞர்கள் மட்டும் தான் அடிமை என்று ஆணித்தரமாக சொல்லிவிட முடியாது. ஏனெனில் பள்ளி குழந்தைகள் முதல் பள்ளு போன தாத்தாக்கள் வரை பலர் இந்த ‘செல்ஃபி’ மோகத்திற்கு அடிமையாகியுள்ளனர்.
நண்பர்களுடன், உறவினர்களுடன் ‘செல்ஃபி’ எடுப்பது என்பதை தாண்டி, விலங்குகள் பக்கத்திலும், கடல் நடுவிலும், ரயில் தண்டவாளங்களில், ரயில் பெட்டியின் படிக்கட்டில் நின்றவாறும் ‘செல்ஃபி’ எடுக்கின்றனர். இதில் குறிப்பாக ரயில்களில் போட்டோ எடுக்கும் போது பல உயிரிழப்புகள் நடைபெறுகின்றன. ரெயிலில் அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையை விட தற்போது, ரெயில் வரும்போது, தண்டவாளத்தின் அருகில் இருந்து ‘செல்ஃபி’ எடுக்கும் போது அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனை தடுக்க ரெயில்வே வாரியம், ரயில் நிலையங்கள், தண்டவாள பகுதி, பிளாட்பாரங்கள், ரயில் படிக்கட்டுகள் ஆகியவற்றில் இருந்து ‘செல்ஃபி’ எடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ரயில் நிலையங்களுக்குள் ஆபத்தான முறையில் ‘செல்ஃபி’ எடுப்பவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.
ரயில் நிலையங்களில் இனி ‘செல்ஃபி’ எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..!!
124
previous post