70
சுத்தம் ஈமானில் பாதி என்கிறது இஸ்லாம் ! ஆனால் அதனை பறைசாற்ற வேண்டிய நாமே நமது சுகாதாரத்திற்கு உலை வைக்கும் செயலையும் சிறப்புடன் செய்து வருகிறோம் !
ஆம் அந்த வகையில் தக்வாப்பள்ளி அருகில் உள்ள சந்தில் அப்பகுதியில் வாழும் சுய அறிவில்லாத மக்கள் குப்பைகளை சிதற விட்டு கொட்டி செல்கின்றனர்.
இதனால் அவ்வழியாக கா.மு.பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு செல்லும் பதின்மவயது பிள்ளைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே பேரூராட்சி நிர்வாகம் அப்பகுதியில் முகாமிட்டு குப்பை கொட்டும் பொறுப்பற்ற சுயநலவாதிகளிடம் கடுமையான அபராதம் விதிப்பதுடன் மேற்கண்ட இடத்தை சுத்தம் செய்து இனி வரும் காலங்களில் இதுபோன்ற அசுத்தம் நிகழாமல் தடுக்க வேண்டுகிறோம்.
படம்: யூசுப்(அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்)